வீடுகள் கட்டித்தரக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு போராட்டம்

வீடுகள் கட்டித்தரக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு போராட்டம் நடத்தினர்.

Update: 2023-05-31 18:45 GMT

குடகு-

குடகு மாவட்டத்தில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இடைவிடாது மழை பெய்தது. அப்போது ஏற்பட்ட நிலச்சரிவிலும், மழை வெள்ளத்தால் ஏராளமான வீடுகள் இடிந்தன. இதனால் ஏராளமானோர் வாழ்விடங்களை இழந்து பாதிக்கப்பட்டனர். அதையடுத்து அவர்களுக்கு அரசு சார்பில் வீடுகள் கட்டித்தரப்படும் என்று கூறப்பட்டது. ஆனால் அவர்களுக்கு இதுவரையில் வீடுகள் கட்டிக் கொடுக்கப்படவில்லை. இதனால் அவர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் அவர்களுக்கு ஆதரவாக பல்வேறு கட்சியினரும், அமைப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் நேற்று அவர்களுக்கு ஆதரவாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் குஷால்நகர் தாலுகா நெல்லுதுக்கேரி கிராம பஞ்சாயத்து அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக வீடுகள் கட்டித்தரக்கோரியும், பாதியளவு வீடுகள் சேதமடைந்த நபர்களுக்கு நிவாரண நிதி வழங்கிடக்கோரியும் கோஷங்கள் எழுப்பினர். மேலும் அவர்கள் கூறுகையில் கடந்த 2018-ம் ஆண்டு காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி ஆட்சியில் குமாரசாமி முதல்-மந்திரியாக இருந்தார். அவர் தான் அரசு சார்பில் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடுகள் கட்டித்தரப்படும் என்று கூறினார். கூட்டணி ஆட்சி கவிழ்ந்த பிறகு பா.ஜனதா ஆட்சியில் இதுபற்றி நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது மீண்டும் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்துள்ளதால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக வீடுகள் கட்டிக்கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். பின்னர் அவர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி தாசில்தாரிடம் மனு கொடுத்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்