சொத்து தகராறில் வாலிபர் கொலை

சொத்து தகராறில் வாலிபர் கொலை செய்யப்பட்டார்.;

Update:2022-07-03 02:17 IST

யாதகிரி: யாதகிரி மாவட்டம் சுராப்புரா தாலுகா ரங்கம்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் பாபாபதி (வயது 34). இவரது சகோதரர்கள் கங்கு, காலப்பா. இந்த நிலையில் பெற்றோர் இறந்து விட்டதால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பாபாபதி தனது சகோதரர்களுக்கு சொத்தை பிரித்து கொடுத்தார். ஆனாலும் சொத்தை பிரித்து கொடுத்த விவகாரத்தில் பாபாபதி மற்றும் அவரது சகோதரர்களுக்கு இடையே பிரச்சினை இருந்தது.

இந்த நிலையில் நேற்று பாபாபதியின் வீட்டிற்குள் புகுந்த கங்கு, காலப்பா பாபாபதியை கத்தியால் சரமாரியாக குத்தினர். இதில் ரத்தவெள்ளத்தில் சரிந்து விழுந்து அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். இந்த கொலை சம்பவம் குறித்து சுராப்புரா போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான கங்கு, காலப்பாவை வலைவீசி தேடிவருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்