சுயேச்சை எம்.எல்.ஏ. மாரடைப்பால் உயிரிழப்பு

அரியானா மாநிலம் சுயேச்சை எம்.எல்.ஏ. மாரடைப்பால் உயிரிழந்தார்.

Update: 2024-05-25 10:56 GMT

சண்டிகார்,

அரியானா மாநிலம் பேட்ஷபூர் தொகுதி சுயேச்சை எம்.எல்.ஏ. ராகேஷ் டவுலெட்பெட் (வயது 45). சுயேச்சையாக வெற்றிபெற்ற ராகேஷ் பின்னர் பா.ஜ.க. அரசுக்கு ஆதரவு அளித்தார்.

இந்நிலையில், ராகேசுக்கு இன்று காலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவரது உதவியாளர்கள் அவரை பலம் விகாரி பகுதியில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், சிகிச்சை பலனின்றி ராகேஷ் உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ராகேசின் உயிரிழப்பிற்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்