"2024 இறுதிக்குள் இந்திய சாலைகள் அமெரிக்க தரத்தில் இருக்கும்" - மத்திய மந்திரி நிதின் கட்கரி

2024 இறுதிக்குள் இந்திய சாலை உள்கட்டமைப்பானது அமெரிக்க சாலைகளின் தரத்திற்கு இணையாக இருக்கும் என நிதின் கட்கரி கூறியுள்ளார்.

Update: 2022-12-17 14:46 GMT

புதுடெல்லி,

இந்திய தொழில் வர்த்தக சபை கூட்டமைப்பின் மாநாடு டெல்லியில் நடைபெற்றது. இதில் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை மந்திரி நிதின் கட்கரி கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

"இந்தியாவில் உலகத் தரத்திலான சாலை உள்கட்டமைப்புகளை கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறோம். 2024-ம் ஆண்டு இறுதிக்குள் நமது சாலை உள்கட்டமைப்பானது அமெரிக்க சாலைகளின் தரத்திற்கு இணையாக இருக்கும்.

நமது தளவாட செலவு ஒரு பெரிய பிரச்சனையாக உள்ளது. தற்போது, இது 16 சதவீதமாக உள்ளது, ஆனால் 2024 இறுதி வரை, ஒற்றை இலக்கமாக, 9 சதவீதம் வரை கொண்டு செல்வோம் என உறுதி அளிக்கிறேன்.

இந்தியா தன்னை ஒரு ஆற்றல் ஏற்றுமதியாளராக வடிவமைத்துக்கொள்ளும் வகையில் சிறந்த நிலையில் உள்ளது. இது இந்தியாவில் பசுமை ஹைட்ரஜனால் மட்டுமே சாத்தியமாகும். எதிர்காலத்தில் பசுமை ஹைட்ரஜனின் உலகளாவிய உற்பத்தி மையமாகவும் ஏற்றுமதியாளராகவும் இந்தியா மாறும்."

இவ்வாறு மத்திய மந்திரி நிதின் கட்கரி தெரிவித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்