மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கருடன் அமெரிக்க வெளியுறவு மந்திரி தொலைபேசியில் பேச்சு

மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கருடன் அமெரிக்க வெளியுறவு மந்திரி தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்தினார்.

Update: 2022-10-30 20:03 GMT

கோப்புப்படம்

புதுடெல்லி,

மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கரை அமெரிக்க வெளியுறவு மந்திரி ஆண்டனி பிளிங்கன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது இருவரும் பயங்கரவாத எதிர்ப்பு ஒத்துழைப்பு மற்றும் உக்ரைனுக்கு எதிரான ரஷியாவின் தொடர்ச்சியான ஆக்கிரமிப்பு உள்ளிட்ட பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சினைகள் குறித்து விவாதித்தனர்.

இது குறித்து வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், "அமெரிக்க வெளியுறவு மந்திரி ஆண்டனி பிளிங்கனுடனான உரையாடல் சிறப்பாக அமைந்தது. பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு பொறுப்புக்கூறல் குறித்த அவரது வலுவான மற்றும் தெளிவான செய்திக்கு நன்றி தெரிவித்தேன். உக்ரைன் மோதல் மற்றும் பிற பிராந்திய பிரச்சினைகள் பற்றி விவாதிக்கப்பட்டது" என குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்