கனகதாசர் ஜெயந்தி கொண்டாட அனுமதிக்க வேண்டும்
உப்பள்ளி ஈத்கா மைதானத்தில் கனகதாசர் ஜெயந்தி கொண்டாட அனுமதிக்கவேண்டும் என்று ஸ்ரீராமசேனை அமைப்பினர் கோரிக்கை வைத்துள்ளனர்.;
உப்பள்ளி:-
தார்வார் மாவட்டம் உப்பள்ளியில் ஈத்கா மைதானம் உள்ளது. இந்த ஈத்கா மைதானத்தில் ரம்ஜான், பக்ரீத் பண்டிகையையொட்டி முஸ்லிம் மதத்தினர் ஒன்று திரண்டு தொழுகை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் ஈத்கா மைதானத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட அனுமதிக்கும்படி இந்து அமைப்பினர் கோரிக்கை வைத்தனர். இதுதொடர்பான வழக்கில் தார்வார் ஐகோர்ட்டு, ஈத்கா மைதானத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட அனுமதி அளித்து உத்தரவிட்டது.
இதற்கிடையே ஈத்கா மைதானத்தில் திப்பு சுல்தான் ஜெயந்தி கொண்டாட அனுமதிக்கும்படி முஸ்லிம் அமைப்பினர் மாநகராட்சிக்கு கோரிக்கை வைத்துள்ளனர். இந்த நிலையில் வருகிற 11-ந்தேதி கனகதாசர் ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது. இதேபோல் உப்பள்ளி ஈத்கா மைதானத்தில் கனகதாசர் ஜெயந்தி விழா கொண்டாட அனுமதி அளிக்கும்படி ஸ்ரீராமசேனை அமைப்பினர், தார்வார் மாநகராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர். இதனால் உப்பள்ளியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.