மணமேடையில் மணமகளுக்கு முத்த மழை பொழிந்த மணமகன்...அதிர்ந்த பெண் வீட்டார் - களேபரத்தில் முடிந்த திருமணம்

திருமணத்தின் வர்மாலா சடங்கின் போது, மணமகன் மணப்பெண்ணிற்கு முத்தம் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

Update: 2024-05-26 08:50 GMT

லக்னோ,

உத்தரப்பிரதேச மாநிலம், ஹபூரில் உள்ள அசோக் நகர் என்ற இடத்தில் சங்கர்லால் என்ற வாலிபருக்கு திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. திருமண மேடையில் சங்கர்லால் திருமணம் செய்யப்போகும் பெண்ணுக்கு மாலை மாற்றினார்.

மாலை மாற்றியவுடன் மணமகனும் மணமகளுக்கு முத்தமழை பொழிந்தார். திருமணத்தின் வர்மாலா சடங்கின் போது, மணமகன் மணப்பெண்ணிற்கு முத்தம் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. உடனே பெண் வீட்டார் மேடையில் ஏறி பெண்ணுக்கு எப்படி முத்தம் கொடுக்கலாம் என்று கூறி வாக்குவாதம் செய்தனர். அப்போது, அவர்கள் தடியோடு மணமேடையில் ஏறி மணமகன் வீட்டாரோடு வாக்குவாதம் செய்தனர். மணப்பெண்தான் முதலில் முத்தம் கொடுக்கவேண்டும் என்று கேட்டார் என்று சங்கர்லால் கூறினார்.

இருப்பினும், அதைக் கேட்காத மணமகள் வீட்டார் மணமகன் வீட்டாரைத் தாக்கினர். இரு தரப்பினரும் மோதிக்கொண்டதில் பெண்ணின் தந்தை உட்பட 6 பேர் காயமடைந்தனர். உடனே போலீசார் வரவழைக்கப்பட்டனர். இரண்டு குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் கைதுசெய்யப்பட்டனர். இதில், மணமகன் கட்டாயப்படுத்தி முத்தம் கொடுத்ததாக மணமகள் வீட்டைச் சேர்ந்தவர்கள் குற்றம்சாட்டினர்.

இதுகுறித்து இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் கூறுகையில், `இரு தரப்பினரும் எழுத்துபூர்வமாக புகார் கொடுக்கவில்லை. புகார் கிடைத்த பிறகு நடவடிக்கை எடுக்கப்படும்' என்று தெரிவித்தார். இறுதியில் திருமணம் ரத்து செய்யப்படுவதாக இருதரப்பினரும் தெரிவித்தனர். ஆனால், பெரியவர்கள் திருமணத்தை வேறு ஒரு தேதியில் நடத்த பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்