தெலுங்கானா குர்னபள்ளி காட்டு பகுதியில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய பெண் மாவோயிஸ்டுகள் கைது!

தெலுங்கானாவில் காட்டுப் பகுதிக்குள் பதுங்கி இருந்த மாவோயிஸ்டு பெண் பயங்கரவாதிகள் 2 பேர் பிடிபட்டனர்.

Update: 2022-09-09 05:58 GMT

ஐதராபாத்,

கேரளா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் மாவோயிஸ்டு பயங்கரவாதிகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த கூட்டு அதிரடி படை போலீசார் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

இதில் தெலுங்கானா மாநிலம் குர்னபள்ளி - போடாநெல்லி காட்டு பகுதியில் மாவோயிஸ்டு பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து கூட்டு அதிரடி படை போலீசார் அங்கு விரைந்து சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதில் அங்குள்ள அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் பதுங்கி இருந்த மாவோயிஸ்டு பெண் பயங்கரவாதிகள் 2 பேர் நேற்று பிடிபட்டனர்.

இவர்களில் ஒருவர் மூத்த மாவோயிஸ்டு தலைவர் தாமோதரின் மனைவி ராஜிதா (வயது 25) என்பவர் ஆவார். இன்னொருவர் மாத்வி தானி. இவர்கள் இருவருக்கும் பல்வேறு வழக்குகளில் தொடர்பு இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்