கேரளாவில் பயங்கரம்! சொத்து தகராறில் இளைஞர் வாயில் இரும்பு கம்பியை திணித்து கொடூர கொலை!

கேரளாவில் பழங்குடியின இளைஞர் ஒருவர் வாயில் கம்பி சொருகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.;

Update:2022-10-08 19:30 IST

இடுக்கி,

இடுக்கி மாவட்டம் மறையூரில் பழங்குடியின இளைஞர் ஒருவர் வாயில் கம்பி சொருகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

மறையூரில் ரமேஷ் (27) என்பவர் கொல்லப்பட்டார். ரமேஷின் உறவினர் சுரேஷ் உடன் ஏற்பட்ட சொத்து தகராறே கொலைக்குக் காரணமென முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

வெள்ளிக்கிழமை நள்ளிரவு ரமேஷின் உறவினர் சுரேஷ் கொலையை செய்ததாக போலீசார் தெரிவித்தனர். வெள்ளிக்கிழமை நள்ளிரவு நடந்த சொத்து தகராறில் குடிபோதையில் இருந்த சுரேஷ், ரமேஷை கம்பியால் தலையில் தாக்கி வாயில் கம்பியை வைத்து கொலை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. அதன்பின் சுரேஷ் தலைமறைவானார். தலைமறைவாக இருந்த அவர், அருகில் உள்ள காட்டுப் பகுதியில் இருந்து பிடிபட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்