மத்தியபிரதேசத்தில் அளவுக்கு அதிகமாக மயக்கமருந்து செலுத்தி மருத்துவ மாணவி தற்கொலை...!

மத்தியபிரதேசத்தில் அளவுக்கு அதிகமாக மயக்கமருந்து செலுத்தி மருத்துவ மாணவி தற்கொலை செய்துகொண்டார்.;

Update:2022-07-25 07:22 IST

இந்தூர்,

மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ கல்லூரியில் 27 வயது மருத்துவ மாணவி, முதுநிலை மயக்கவியல் பட்டப் படிப்பு படித்து வந்தார்.

இந்நிலையில் நேற்று அவர் தனக்குத் தானே அளவுக்கு அதிகமாக மயக்கமருந்தை ஊசி மூலம் அதிகமாக செலுத்திக்கொண்டு தற்கொலைக்கு முயன்றார். அந்தப் பெண்ணின் நிலை அறிந்த சக மாணவிகள், அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் அவரை சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.

இது குறித்து இந்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்