சத்தீஷ்கார்: யானை தாக்கி இளைஞர் பலி
மகேந்திர சிங்கின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.;
ராய்ப்பூர்,
சத்தீஷ்கார் மாநிலம் கர்பா மாவட்டம் கவுபரா கிராமத்தை சேர்ந்த இளைஞர் மகேந்திர சிங் (வயது 35). இவர் இன்று காலை தனது வீட்டிற்கு வெளியே தீ மூட்டி அதன் அருகே நின்றுகொண்டிருந்தார்.
அப்போது, அங்கு வந்த காட்டு யானை மகேந்திர சிங்கை தாக்கியது. இந்த சம்பவத்தில் அவர் நிகழ்விடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து அறிந்த போலீசார், வனத்துறையினர் விரைந்து சென்று மகேந்திர சிங்கின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
கூட்டத்தில் இருந்து பிரிந்த இந்த ஒற்றை காட்டு யானை தாக்கி ஏற்கனவே 2 பேர் உயிரிழந்த நிலையில் தற்போது மேலும் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.