சுரங்கப்பாதை பணிகளால் ஜோஷிமத் நகரில் விரிசல் ஏற்பட்டதா? புகார்களை மறுக்கும் என்.டி.பி.சி. நிறுவனம்

சுரங்கப்பாதை பணிகளால் ஜோஷிமத் நகரில் விரிசல்கள் ஏற்படுவதாக எழுந்த புகார்களை என்.டி.பி.சி. நிறுவனம் மறுத்துள்ளது.

Update: 2023-01-10 12:31 GMT

Image Courtesy : ANI

டேராடூன்,

உத்தரகாண்ட் மாநிலத்தின் சமோலி மாவட்டத்தில், தரை பகுதியில் இருந்து 6 ஆயிரம் அடி உயரத்தில் ஜோஷிமத் நகரானது அமைந்து உள்ளது. இமயமலையையொட்டி அமைந்த புனித நகரம் எனப்படும் இந்நகரில் பிரசித்தி பெற்ற ஜோதிர்மத் கோவில் அமைந்துள்ளது.

இந்நகரம் நிலநடுக்க பாதிப்புக்கு அதிகளவில் இலக்காக கூடிய இடங்களை கொண்டுள்ளது. இந்த சூழலில், கடந்த சில நாட்களாக, வரலாற்று சிறப்பு மிக்க ஜோஷிமத் நகரின் பல பகுதிகளில் உள்ள வீடுகள், குடியிருப்பு பகுதிகள் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்ட கட்டிடங்களில் திடீர், திடீரென விரிசல் விட தொடங்கியது.

இதுதவிர, தரை பகுதியிலும் நிலநடுக்கம் ஏற்பட்டு, பெரிய அளவில் விரிசல் ஏற்பட்டு மக்களை அச்சத்தில் உறைய செய்தது. இதையடுத்து ஜோஷிமத் நகரில் அதிக அளவில் விரிசல் விட்ட ஓட்டல்கள் மற்றும் வீடுகளை இடிக்க அதிகாரிகள் முடிவு செய்து, அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் மத்திய அரசுக்கு சொந்தமான என்.டி.பி.சி. மின் உற்பத்தி நிலையம் சார்பில் அந்த மலைப்பகுதியில் ஒரு நீண்ட சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு வருவதே இந்த விளைவுகளுக்கு காரணம் என்று குற்றச்சாட்டு எழுந்தது. இதை மறுத்துள்ள என்.டி.பி.சி. நிறுவனம், டனல் போரிங் எந்திரம் மூலம் சுரங்கப்பாதை அமைக்கப்படுவதாகவும், வெடிப்பொருட்கள் பயன்படுத்தப்படுவது இல்லை என்றும் விளக்கமளித்துள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்