தாஜ்மகாலைச் சுற்றியுள்ள கடைகளை 3 மாதத்திற்குள அகற்ற உத்தரவு

தாஜ்மகால் அருகில் இருக்கும் சுமார் 3 ஆயிரம் கடைகளுக்கு அரசு தரப்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.;

Update:2022-10-24 06:08 IST

லக்னோ,

இந்தியாவின் மிக முக்கியமான சுற்றுலா தளமாக உத்தர பிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள தாஜ்மகால் விளங்கி வருகிறது. முகலாய மன்னர் ஷாஜகான் தனது மனைவி மும்தாஜ் நினைவாக கட்டிய இந்த பிரம்மாண்ட கட்டடம், இன்று உலகப் புகழ் பெற்ற காதல் சின்னமாகவும் திகழ்கிறது.

இத்தகைய சிறப்புகளைக் கொண்ட தாஜ்மகாலுக்கு உலகம் முழுவதும் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் தாஜ்மகாலைச் சுற்றி 500 மீட்டர் தூரத்திற்கு எந்த கடைகளும் செயல்படக் கூடாது என கடந்த செப்டம்பர் மாதம் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருந்தது.

இதன் படிப்படையில் தாஜ்மகால் அருகில் இருக்கும் சுமார் 3 ஆயிரம் கடைகளுக்கு அரசு தரப்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதில் கடைகளை வேறு இடங்களுக்கு மாற்றுவதற்காக 3 மாதம் அவகாசம் வழங்கப்படுவதாகவும், அதற்குள் வியாபாரிகள் தங்கள் கடைகளை அகற்ற வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்