நமது நீதித்துறை சுதந்திரமானது..! அரசியலமைப்பு மிக உயர்ந்தது - மத்திய சட்ட மந்திரி கிரண் ரிஜிஜூ

நமது நீதித்துறை சுதந்திரமானது, நமது அரசியலமைப்பு மிக உயர்ந்தது."என தெரிவித்துள்ளார்.

Update: 2023-01-22 12:43 GMT

புதுடெல்லி,

டெல்லி ஐகோர்ட்டு ஓய்வுபெற்ற நீதிபதி ஆர்.எஸ்.சோதி யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில்,

சுப்ரீம் கோர்ட்டு முதன்முறையாக அரசியலமைப்பை அபகரித்துள்ளது. நாங்களே [நீதிபதிகளை] நியமிப்போம் என்றார்கள்.இதில் அரசுக்கு எந்தப் பங்கும் இருக்காது,ஐகோர்ட்டு , சுப்ரீம் கோர்ட்டுக்கு அடிபணிவதில்லை [ஆனால்]ஐகோர்ட்டு நீதிபதிகள் சுப்ரீம் கோர்ட்டை பார்த்து அடிபணியத் தொடங்குகின்றனர். என தெரிவித்திருந்தார். ஐகோர்ட்டு மற்றும் சுப்ரீம் கோர்ட்டுக்கு நீதிபதிகளை நியமிக்கும் கொலிஜியம் எனப்படும் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் குழு அமைப்பு செயல்படாது என்று அவர் ஏன் கருதுகிறார் என்பதை அவர் விளக்கினார்.

இந்த விடியோவை மேற்கோள்காட்டி மத்திய சட்டத்துறை மந்திரி கிரண் ரிஜிஜூ டுவிட்டர் பதிவை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் .

ஒரு நீதிபதியின் குரல்... இந்திய ஜனநாயகத்தின் உண்மையான அழகு அதன் வெற்றி. மக்கள் தங்கள் பிரதிநிதிகள் மூலம் தங்களை ஆட்சி செய்கிறார்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மக்கள் மற்றும் சட்டங்களின் நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள். நமது நீதித்துறை சுதந்திரமானது, நமது அரசியலமைப்பு மிக உயர்ந்தது."

"உண்மையில், பெரும்பான்மையான மக்கள் ஒரே மாதிரியான விவேகமான கருத்துக்களைக் கொண்டுள்ளனர். அரசியலமைப்பின் விதிகள் மற்றும் மக்களின் ஆணையைப் புறக்கணிப்பவர்கள் மட்டுமே இந்திய அரசியலமைப்பிற்கு மேலானவர்கள் என்று நினைக்கிறார்கள்." என தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்