நிதி ஆயோக் தலைவராக இருந்த பரமேஸ்வரன் ஐயர் உலக வங்கியின் நிர்வாக இயக்குனராக தேர்வு
நிதி ஆயோக் அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரியாக பி.வி.ஆர். சுப்பிரமணியம் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.;
புதுடெல்லி,
நிதி ஆயோக்கின் தலைவராக இருந்த பரமேஸ்வரன் ஐயர், அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் இயங்கும் உலக வங்கியின் தலைமையகத்தில் நிர்வாக இயக்குனராக தேர்வு செய்யப்பட்டு உள்ளார். அவர் 3 ஆண்டுகள் அந்த பொறுப்பில் இருப்பார்.
இதையடுத்து நிதி ஆயோக் அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரியாக பி.வி.ஆர். சுப்பிரமணியம், நியமனம் செய்யப்பட்டு உள்ளார். இவர் 2 ஆண்டுகள் இந்த பொறுப்பு வகிப்பார். இவரது நியமனத்துக்கு மத்திய அமைச்சக பணி நியமன குழு நேற்று ஒப்புதல் அளித்தது.