நாடாளுமன்ற 6ம் கட்ட தேர்தல்: வாக்குப்பதிவு நிறைவு

நாடாளுமன்ற 6ம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது

Update: 2024-05-24 23:51 GMT

டெல்லி,



Live Updates
2024-05-25 12:53 GMT

நாடாளுமன்ற 6ம் கட்ட தேர்தல்: வாக்குப்பதிவு நிறைவு

நாடு முழுவதும் மொத்தமுள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. அதன்படி, 102 தொகுதிகளுக்கு முதற்கட்ட தேர்தல் கடந்த மாதம் 19ம் தேதியும், 88 தொகுதிகளுக்கு 2ம் கட்ட தேர்தல் கடந்த மாதம் 26ம் தேதியும், 93 தொகுதிகளுக்கு கடந்த 7ம் தேதி 3ம் கட்ட தேர்தலும், 96 தொகுதிகளுக்கு கடந்த 13ம் தேதி 4ம் கட்ட தேர்தலும் நடைபெற்றது. இதனை தொடர்ந்து 49 தொகுதிகளுக்கு கடந்த 20ம் தேதி 5ம் கட்ட தேர்தல் நடைபெற்றது.

இதையடுத்து, 58 தொகுதிகளுக்கு இன்று 6ம் கட்ட தேர்தல் நடைபெற்றது. உத்தரபிரதேசத்தில் 14 தொகுதிகள், அரியானாவில் 10 தொகுதிகள், பீகாரில் 8 தொகுதிகள், மேற்குவங்காளத்தில் 8 தொகுதிகள், டெல்லியில் 7 தொகுதிகள், ஒடிசாவில் 6 தொகுதிகள், ஜார்க்கண்ட்டில் 4 தொகுதிகள், ஜம்மு-காஷ்மீரில் 1 தொகுதிக்கு இன்று தேர்தல் நடைபெற்றது. அதேபோல், ஒடிசா மாநில சட்டசபைக்கு 42 தொகுதிகளுக்கும் இன்று தேர்தல் நடைபெற்றது.

காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். இந்நிலையில், வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் நிறைவடைந்துள்ளது. ஒருசில வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் இருப்பதால் அவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு வாக்களிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதேவேளை, வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில் வாக்குப்பதிவு எந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களுக்கு பாதுகாப்பாக அனுப்பி வைக்கும் நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

2024-05-25 10:50 GMT

நாடாளுமன்ற 6ம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் 3 மணி நிலவரப்படி 49.20 சதவிகித வாக்குப்பதிவாகியுள்ளது.

3 மணி வரையிலான மாநில வாரியாக வாக்குப்பதிவு நிலவரம்:

பீகார் - 45.21%

அரியானா - 46.26%

ஜம்மு-காஷ்மீர் - 44.41%

ஜார்க்கண்ட் - 54.34%

டெல்லி - 44.58%

ஒடிசா - 48.44%

உத்தரபிரதேசம் - 43.95%

மேற்குவங்காளம் - 70.19%

2024-05-25 09:06 GMT

நாடாளுமன்ற 6ம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் மதியம் 1 மணி நிலவரப்படி 39.13 சதவிகித வாக்குப்பதிவாகியுள்ளது.

மதியம் 1 மணி வரையிலான மாநில வாரியாக வாக்குப்பதிவு நிலவரம்:

பீகார் - 36.48%

அரியானா - 36.48%

ஜம்மு-காஷ்மீர் - 35.22%

ஜார்க்கண்ட் - 42.54%

டெல்லி - 34.37%

ஒடிசா - 35.69%

உத்தரபிரதேசம் - 37.23%

மேற்குவங்காளம் - 54.80%

2024-05-25 05:59 GMT


டெல்லியில் உள்ள வாக்குச்சாவடியில் முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தனது குடும்பத்தினருடன் வந்து ஜனநாயக கடமையை ஆற்றினார்.

2024-05-25 05:29 GMT

நாடாளுமன்ற தேர்தலில் வாக்களித்த பிறகு தனது தயார் சோனியா காந்தியுடன் எடுத்துக்கொண்ட செல்பியை ராகுல் காந்தி தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.

2024-05-25 04:59 GMT

பீகார்: 9.55 சதவிகிதம்

அரியானா: 8.31 சதவிகிதம்

ஜம்மு காஷ்மீர்: 8.89 சதவிகிதம்

ஜார்க்கண்ட்: 11.74 சதவிகிதம்

டெல்லி: 8.94 சதவிகிதம்

ஒடிசா: 7.43 சதவிகிதம்

உத்தர பிரதேசம்: 12.33 சதவிகிதம்

மே.வங்கம்: 16.54 சதவிகிதம்

2024-05-25 04:26 GMT

6-வது கட்ட நாடாளுமன்ற தேர்தலில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 9 மணி நிலவரப்படி 10.82 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளது.

2024-05-25 04:19 GMT


நாடாளுமன்ற தேர்தல்: புதுடெல்லி தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடியில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களான சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றினர்.

2024-05-25 04:10 GMT



2024-05-25 03:53 GMT

6-வது கட்ட நாடாளுமன்ற தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. 7 மாநிலங்களில் உள்ள 57 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.   இன்று காலை முதலே வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், டெல்லியில் உள்ள வாக்குச்சாவடியில் ஜனாதிபதி திரவுபதி முர்மு தனது வாக்கினை செலுத்தினார். 



Tags:    

மேலும் செய்திகள்