மூன்றே வார்த்தையில் ராஜினாமா கடிதம் எழுதிய ஊழியர் - வைரலாகும் புகைப்படம்
ஊழியர் ஒருவர் மூன்றே வார்த்தைகளில் ராஜினாமா கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.;
Image Courtesy : Twitter
புதுடெல்லி,
சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது பல புகைப்படங்கள், வீடியோக்கள் போன்றவை வைரலாவது வழக்கமான ஒன்றாகும். அந்த வகையில் தற்போது ஊழியர் ஒருவரின் ராஜினாமா கடிதம் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.
தான் வேலை செய்யும் நிறுவனத்தில் இருந்து ராஜினாமா செய்ய முடிவெடுத்த ஊழியர் ஒருவர் மூன்றே வார்த்தைகளில் ராஜினாமா கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் "BYE BYE SIR " என்ற வாசகம் மட்டுமே இடம் பெற்றுள்ளது.
வழக்கமாக ஒரு நிறுவனத்தில் இருந்து வேலையை ராஜினாமா செய்பவர்கள் நிறுவனத்தின் உயர்பதவியில் இருப்பவர்களுக்கு நீண்ட கடிதம் அல்லது மின்னஞ்ஜல் அனுப்புவார்கள். ஆனால் 3 வார்த்தைகளில் எழுதப்பட்டுள்ள இந்த ராஜினாமா கடிதம் தற்போது அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.