'மதுபானக் கொள்கை ஊழல் தொடர்பாக எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என பிரதமர் ஒப்புக்கொண்டார்' - கெஜ்ரிவால்

மதுபானக் கொள்கை ஊழல் தொடர்பாக எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என பிரதமர் மோடி ஒப்புக்கொண்டதாக கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

Update: 2024-05-24 13:56 GMT

Image Courtesy : ANI

புதுடெல்லி,

டெல்லி மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்ட டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், இடைக்கால ஜாமீனில் சுப்ரீம் கோர்ட்டால் விடுவிக்கப்பட்டார். இதையடுத்து கெஜ்ரிவால் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் கெஜ்ரிவால் இன்று வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது;-

"மதுபானக் கொள்கை ஊழல் நடந்ததாகக் கூறி பா.ஜ.க.வினர் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர். இது தொடர்பாக சஞ்சய் சிங்கையும், மணீஷ் சிசோடியாவையும், என்னையும் கைது செய்தனர். 500-க்கும் மேற்பட்ட சோதனைகள் நடத்தப்பட்டன. ஆனால் அதில் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.

நேற்றைய தினம் பிரதமர் மோடி அளித்த பேட்டியில், 'ஆதாரங்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை, ஏனெனில் கெஜ்ரிவால் ஒரு அனுபவம் வாய்ந்த திருடர்' என்று கூறியிருக்கிறார். இதன் மூலம் மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என்பதை பிரதமர் மோடி ஒப்புக்கொண்டிருக்கிறார். அதை மறைப்பதற்காக 'கெஜ்ரிவால் ஒரு அனுபவம் வாய்ந்த திருடர்' என்று கூறுகிறார்.

மதுபானக் கொள்கை ஊழல் வழக்கு போலியானது என்பதை நீங்களே ஒப்புக்கொண்ட நிலையில், உங்களிடம் எந்த ஆதாரமும் இல்லாத நிலையில், இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட அனைவரையும் விடுதலை செய்யுங்கள்."

இவ்வாறு கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்