யோகி ஆதித்யநாத்தின் 50-வது பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்து..!!

பிரதமர் மோடி, யோகி ஆதித்யநாத்தின் 50-வது பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.;

Update:2022-06-05 10:04 IST

Image Courtesy : PTI 

புதுடெல்லி,

உத்தரபிரதேச முதல் மந்திரியாக செயல்பட்டு வருபவர் யோகி ஆதித்யநாத். பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான இவர் இன்று தனது 50-வது வயதில் அடியெடுத்து வைக்கிறார். யோகி ஆதித்யநாத்தின் 50-வது பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தனது டுவிட்டர் பக்கத்தில் யோகி ஆதித்யநாத்தை குறிப்பிட்டு பிரதமர் மோடி தெரிவித்துள்ள வாழ்த்து குறிப்பில், " உத்தரபிரதேசதின் ஆற்றல்மிக்க முதலமைச்சருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். அவரது திறமையான தலைமையின் கீழ், மாநிலம் முன்னேற்றத்தின் புதிய உயரங்களை எட்டியுள்ளது. மாநில மக்களுக்கு அவர் மக்கள் சார்பான நிர்வாகத்தை உறுதி செய்துள்ளார். மக்கள் சேவையில் அவரது நீண்ட மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்காக நான் பிரார்த்தனை செய்கிறேன்" என பதிவிட்டுள்ளார்.



Tags:    

மேலும் செய்திகள்