பா.ஜனதா பிரமுகரின் அநாகரீக கருத்துக்கு காங்கிரஸ் கண்டனம் - பிரதமர் மன்னிப்பு கேட்க வலியுறுத்தல்

சோனியாகாந்தி பற்றிய பா.ஜனதா பிரமுகரின் அநாகரீக கருத்துக்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.

Update: 2022-07-24 20:38 GMT

கோப்புப்படம்

புதுடெல்லி,

பா.ஜனதா தலைவர் ஜே.பி.நட்டாவுக்கு காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் ஒரு கடிதம் எழுதி உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

கடந்த 23-ந் தேதி, தேசிய செய்தி சேனல் ஒன்றில் நடந்த விவாதத்தின்போது, காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி பற்றி பா.ஜனதா செய்தித்தொடர்பாளர் பிரேம் சுக்லா அநாகரீகமாக கருத்து தெரிவித்துள்ளார். இதற்கு எங்கள் கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம். வேத காலத்தில் இருந்து பெண்களை மதிப்பது இந்தியாவின் பாரம்பரியம். இத்தகைய நாட்டில், ஒரு தேசிய கட்சியின் 75 வயதான பெண் தலைவர் மீது கண்ணியக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்துவது, பெண்களுக்கு எதிரான பா.ஜனதாவின் சிந்தனையை காட்டுகிறது.

அரசியல் தரம் தாழ்ந்து விட்டதை காட்டுகிறது. எனவே, பிரேம் சுக்லாவின் கருத்துக்காக பிரதமர் மோடியும், நட்டாவும் மன்னிப்பு கேட்க வேண்டும். எதிர்காலத்தில் இதுபோல் பேசினால், காங்கிரஸ் அவதூறு வழக்கு தொடரும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்