கேரளாவில் ராகுல் காந்தியின் பாத யாத்திரையில் திரளாக பங்கேற்ற பெண்கள்-இளைஞர்கள்
காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, இன்று 13-வது நாளாக தொண்டர்களுடன், ஆலப்புழா மாவட்டத்தில் நடைப்பயணத்தை தொடங்கினார்.;
திருவனந்தபுரம்,
காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, இன்று 13-வது நாளாக தொண்டர்களுடன், ஆலப்புழா மாவட்டத்தில் நடைப்பயணத்தை தொடங்கினார்.
மத்தியில் ஆளும் பாஜகவுக்கு எதிராக மக்களை ஒன்றுதிரட்டும் நோக்கில் 'பாரத் ஜோடோ' நடைப்பயணத்தை ராகுல் காந்தி மேற்கொண்டுள்ளர். கன்னியாகுமரியில் தொடங்கிய இந்த பயணம் காஷ்மீரில் நிறைவு பெறுகிறது. தமிழகத்தில் நிறைவடைந்த நடைப்பயணம், தற்போது கேரளத்தில் நடைபெற்று வருகிறது.
கேரளத்தில் ராகுல் காந்தியின் நடைப்பயணம் இன்று 13-வது நாளாக நடைபெற்று வருகிறது. ஆலப்புழா மாவட்டத்தில் நடைப்பயணத்தை ராகுல் காந்தி தொடங்கியுள்ளார்.ராகுல் காந்தி பாதயாத்திரை மேற்கொண்ட பகுதிகளில் காலையிலேயே ஏராளமான பொதுமக்கள் சாலையின் இருபுறமும் திரண்டு நின்று வரவேற்பு அளித்தனர்.