திருவனந்தபுரம் மாநகராட்சி மேயர் வேட்பாளரை அறிவித்தது பாஜக: ஸ்ரீலேகாவிற்கு ஏமாற்றம்
மேயர் கனவுடன் காத்திருந்த முன்னாள் பெண் ஐ.பி.எஸ். அதிகாரி ஸ்ரீலேகாவுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.;
திருவனந்தபுரம்,
கேரளாவில் கடந்த வாரம் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இதில், திருவனந்தபுரம் மாநகராட்சியை பாஜக கைப்பற்றி அசத்தியது. 45 ஆண்டு கால வரலாற்றில் முதல் முறையாக பாஜக திருவனந்தபுரம் மாநகரட்சியை கைப்பற்றியது தேசிய அளவில் கவனம் பெற்றது. மொத்தம் உள்ள 101 வார்டுகளில் 50 வார்டுகளை பாஜகவும் 29 வார்டுகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியும், 19 வார்டுகளை காங்கிரசும், 2 வார்டுகளை சுயேச்சைகளும் வென்றன. ஒரு வார்டில் வேட்பாளர் இறந்ததால் தேர்தல் நிறுத்தப்பட்டது.
இதனை தொடர்ந்து மேயர் வேட்பாளராக முன்னாள் பெண் ஐ.பி.எஸ். அதிகாரி ஸ்ரீலேகா, மாநில பாஜக செயலாளர் வி.வி.ராஜேஷ் ஆகியோரது பெயர்கள் பா.ஜனதா வட்டாரத்தில் அடிபட்டது. ஆனால் மாநில பாஜக செயலாளர் ராஜேஷை மேயர் வேட்பாளராக என மேலிடம் அறிவித்தது. மேலும் துணை மேயராக பெண் கவுன்சிலரான ஆஷாநாத்தும் அறிவிக்கப்பட்டுள்ளார். மேயர் வேட்பாளர் பதவி கிடைக்காததால் முன்னாள் பெண் ஐ.பி.எஸ். அதிகாரி ஸ்ரீலேகாவுக்கு ஏமாற்றத்தை தந்துள்ளது.