70 வயது மூதாட்டியை கற்பழித்த வாலிபர்

கலபுரகியில் எழுபது வயது மூதாட்டியை வாலிபர் ஒருவர் கற்பழித்த சம்பவம் நடந்துள்ளது.;

Update:2022-11-08 02:48 IST

கலபுரகி:

கலபுரகி மாவட்டம் ஆலந்தா தாலுகா அன்னூர் கிராமத்தைச் சேர்ந்தவர் 70 வயது மூதாட்டி. இவர் வீட்டில் தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில் அவரது வீட்டின் அருகே சந்தோஷ்(வயது 28) என்பவர் வசித்து வந்தார். இந்த நிலையில் சந்தோஷ், மூதாட்டி வீட்டிற்குள் நுழைந்தார். பின்னர் அவர் மூதாட்டியை கற்பழித்தார். அதையடுத்து அவர் அங்கிருந்து தப்பி சென்றார். வாலிபர் பலாத்காரம் செய்ததில் மூதாட்டிக்கு உடலில் காயம் ஏற்பட்டது. இதுகுறித்து அறிந்ததும் அக்கம்பக்கத்தினர் மூதாட்டியை மீட்டு கலபுரகி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் ஆலந்தா போலீசார் வழக்குப்பதிவு செய்து வாலிபரை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்