தோட்டத்தில் நின்ற சந்தன மரம் வெட்டி கடத்தல்

எச்.டி.கோட்டை தாலுகாவில் தோட்டத்தில் நின்ற சந்தன மரத்தை மா்மநபா்கள் வெட்டி கடத்தல் சென்றனர்.

Update: 2023-09-19 18:45 GMT

எச்.டி.கோட்டை

மைசூரு மாவட்டம் எச்.டி.கோட்டை (தாலுகா) டவுன் பகுதியை சேர்ந்தவர் செல்வம். இவரது வீட்டின் பின்புறம் தோட்டம் உள்ளது. அங்கு சந்தன மரங்களை செல்வம் வளர்த்து வருகிறார்.

இந்தநிலையில் நேற்றுமுன்தினம் இரவு செல்வம் தோட்டத்திற்குள் மர்மநபர்கள் புகுந்தனர். பின்னர் தோட்டத்தில் நின்ற சந்தனமரத்தை அவர்கள் மரம் அறுக்கும் எந்திரம் மூலம் துண்டு துண்டாக வெட்டி சரக்கு வாகனத்தில் கடத்தி சென்றனர்.

பின்னர் மறுநாள் செல்வம் தோட்டத்திற்கு சென்றார். அப்போது தோட்டத்தில் நின்ற ஒரு சந்தன மரம் வெட்டப்பட்டு இருந்தது. இதனை பார்த்த செல்வம் அதிர்ச்சி அடைந்தார். அதனை மர்மநபர்கள் வெட்டி கடத்தி சென்றது தெரியவந்தது. அவற்றின் மதிப்பு ரூ. 3 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.

இதுகுறித்து அவர் எச்.டி.கோட்டை டவுன் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் சந்தன மரத்தை வெட்டி கடத்தி சென்ற மர்மநபர்களையும் தேடி வருகிறார்கள்.

கடந்த சில நாட்களுக்கு எச்.டி.கோட்டை டவுன் புரசபை தலைவர் ரங்கா ஐயங்கார் வீட்டின் முன்பு நின்ற சந்தன மரத்தை மர்மநபர்கள் வெட்டி சென்றனர்.

இதனால் பொதுமக்கள் பீதியில் உள்ளனர். மேலும் வீட்டை பூட்டி விட்டு வெளியூர் செல்லவே பயமாக உள்ளது என அப்பகுதி மக்கள் கூறுகிறார்கள். குற்றச்சம்பங்களை தடுக்க போலீசார் இரவு நேரங்களில் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்