மத கொடி அவமதிப்பு: இரு தரப்பினர் இடையே மோதல், வன்முறை

மத கொடி அவமதிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் வன்முறை வெடித்தது.

Update: 2023-04-10 05:15 GMT

ராஞ்சி,

ஜார்க்கண்ட் மாநிலம் ஜம்ஷத்பூர் மாவட்டம் சாஸ்திரி நகரில் கடந்த சனிக்கிழமை இந்து மத பண்டிகையான ராம நவமி தொடர்பான கொடி அவமதிக்கப்பட்டுள்ளது. அந்த கொடி மீது இறைச்சி தொங்கவிடப்பட்டுள்ளது.

இதை அந்த அமைப்பை சேர்ந்த உறுப்பினர்கள் கண்டு ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது இந்த தரப்பிற்கும் மற்றொரு தரப்பிற்கும் இடையே மோதல் வெடித்தது. இரு தரப்பும் மாறி மாறி கற்கலை வீசி தாக்குதல் நடத்தினர்.

இந்த மோதலின்போதுகடைகள், வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர். மேலும், வன்முறையில் ஈடுபட்ட இரு தரப்பினரையும் போலீசார் விரட்டியடித்தனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து சாஸ்திரிநகர் பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வன்முறை நடைபெறாலம் இருந்த அதிரடிப்படையினர் அப்பகுதியில் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்