டெல்லியில் இஸ்ரேல் தூதரகத்துக்கு பலத்த பாதுகாப்பு
டெல்லியில் உள்ள இஸ்ரேல் தூதரகத்துக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.;
கோப்புப்படம்
புதுடெல்லி,
ஹிஸ்புல்லா அமைப்புக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் ஈரான், நேற்று இஸ்ரேல் மீது சரமாரியாக ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடி கொடுத்தால் தாக்குதல் இன்னும் தீவிரமாக இருக்கும் என்றும் ஈரான் எச்சரித்துள்ளது. இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக ஈரான் இந்த தாக்குதலை நடத்தி உள்ளது. இதனால் மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் இந்த தாக்குதலின் எதிரொலியாக டெல்லியில் உள்ள இஸ்ரேல் தூதரகத்துக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருக்கிறது.
டெல்லியில் இஸ்ரேல் தூதரகம் துக்ளக் ரோட்டில் அமைந்துள்ளது. ஏற்கனவே இந்த பகுதியில் 2 முறை குண்டுவெடிப்பு சம்பவம் நடந்துள்ளது. இதனை கருத்தில் கொண்டு தற்போது பாதுகாப்பு முன்பை விட பலப்படுத்தப்பட்டு உள்ளது. தூதரகத்தை சுற்றிலும் இரும்பு தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு, ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். முந்தைய குண்டு வெடிப்பு சம்பவங்களில் யாருக்கும் பாதிப்புகள் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.