மேகதாது திட்டத்தை அமல்படுத்த நடவடிக்கை: அதிகாரிகளுக்கு டி.கே.சிவக்குமார் உத்தரவு

மேகதாது திட்டத்தை அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு டி.கே.சிவக்குமார் உத்தரவிட்டார்.

Update: 2023-05-30 20:51 GMT

கோப்புப்படம்

பெங்களூரு,

கர்நாடக துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் நீர்ப்பாசனத்துறை உயர் அதிகாரிகளுடன் பெங்களூருவில் நேற்று ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையின்போது டி.கே.சிவக்குமார் பேசியதாவது:-

கர்நாடக அரசின் நீர்ப்பாசன திட்டங்களுக்கு மத்திய அரசின் அனுமதியை பெற நீங்கள் முயற்சி செய்ய வேண்டும். இது தான் நான் உங்களுக்கு விதிக்கப்படும் இலக்கு. மேகதாது, மகதாயி திட்டங்களை முன்னுரிமை அடிப்படையில் அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.

மேகதாது திட்டத்திற்கு அரசு ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கியது. அதை நிலம் கையகப்படுத்தும் பணிகளுக்கு பயன்படுத்தாதது ஏன்?.

ஆக்கப்பூர்வமான பணிகளை மேற்கொள்ள தீவிரமாக உழைக்க வேண்டும். எனக்கு எந்த விரோதமும் இல்லை. ஆனால் பணிகள் முறையாக நடைபெற வேண்டும். உங்களுக்கு பதவி வழங்கியர்களுக்கு விசுவாசமாக இருந்தால் அதை சகித்துக்கொள்ள மாட்டேன். பிரதமர் உள்பட சம்பந்தப்பட்ட மத்திய மந்திரிகளை நேரில் சந்தித்து பேசுவோம்.

இவ்வாறு டி.கே.சிவக்குமார் பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்