மும்பை கடற்கரை சாலை திட்டத்தில் பாதாள வாகன நிறுத்தம் அமைக்க சுப்ரீம் கோர்ட்டு அனுமதி - மும்பை மாநகராட்சி கமிஷனர்

மும்பை கடற்கரை சாலை திட்டத்தில் பாதாள வாகன நிறுத்தம் அமைக்க சுப்ரீம் கோர்ட்டு அனுமதி வழங்கி உள்ளது.

Update: 2022-10-01 21:42 GMT

கடற்கரை சாலை திட்டம்

மும்பையில் மெரின் டிரைவ் பகுதியில் இருந்து காந்திவிலி வரை கடற்கரை சாலை திட்டப்பணிகள் நடந்து வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் மும்பை கடற்கரை, கடலுக்குள் 29.2 கி.மீ. தூரத்துக்கு 8 வழிச்சாலை அமைக்கப்பட உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் பாதாள வாகன நிறுத்தம், சாலையோரம் செடி வளர்க்கவும் திட்டமிடப்பட்டு இருந்தது.

இதற்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கோர்ட்டு தடை விதித்து இருந்தது.

சுப்ரீம் கோர்ட்டு அனுமதி

இந்தநிலையில் கடற்கரைசாலை திட்டத்தில் பாதாள வாகன நிறுத்தம், செடிகள் வளர்க்கும் திட்டத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு நேற்று முன்தினம் அனுமதி அளித்து உள்ளது. இந்த தகவலை மாநகராட்சி கமிஷனர் இக்பால் சகால் தெரிவத்தார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், " கோர்ட்டு உத்தரவு ஊக்கமளிக்கும் வகையில் உள்ளது. இதன் மூலம் கடற்கரை சாலை திட்டத்தை மாநகராட்சி திட்டமிட்டபடி 2023-ம் ஆண்டு நவம்பருக்குள் முடிக்கும் " என நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்