போபால் விஷவாயு வழக்கில் சீராய்வு மனு: மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
போபால் விஷவாயு வழக்கில் சீராய்வு மனு குறித்த நிலைப்பாட்டை தெரிவிக்குமாறு மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.;
கோப்புப்படம்
புதுடெல்லி,
மத்தியபிரதேச மாநிலம் போபாலில் 1984-ம் ஆண்டில் விஷவாயு கசிவால் பேரழிவு ஏற்பட்டது. அதற்கு காரணமாக இருந்த நிறுவனத்தின் தற்போதைய உரிமையாளரான டாவ் கெமிக்கல்ஸ் நிறுவனம், கூடுதல் இழப்பீடாக ரூ.7,400 கோடி வழங்க உத்தரவிடக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.
மத்திய அரசு கடந்த 2010-ம் ஆண்டு இந்த மனுவை தாக்கல் செய்தது. இந்த மனுவை நீதிபதி எஸ்.கே.கவுல் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு நேற்று விசாரித்தது. அப்போது, மத்திய அரசின் சீராய்வு மனு குறித்த நிலைப்பாட்டை தெரிவிக்குமாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.
மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, அரசிடம் ஆலோசனை பெற்று தெரிவிப்பதாக கூறினார். அதை பதிவு செய்துகொண்ட சுப்ரீம் கோர்ட்டு, இந்த வழக்கு தொடர்பான விசாரணையை அக்டோபர் 10-ந்தேதிக்கு தள்ளிவைத்தது.