திருப்பதியில் தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி சாமி தரிசனம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி தனது குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார்.

Update: 2024-05-22 15:07 GMT

திருப்பதி,

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். தற்போது கோடை விடுமுறை என்பதால் கடந்த சில தினங்களாக திருப்பதியில் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.

இந்த நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி தனது குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார். வி.ஐ.பி. தரிசனம் மூலமாக சாமி தரிசனம் செய்த அவருக்கு, ரங்கநாயக்க மண்டபத்தில் வேத ஆசீர்வாதங்கள் முழங்க தீர்த்தம் மற்றும் லட்டு பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த அவர், ஆந்திர மாநிலத்தில் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறும் கட்சியுடன் இணைந்து இரு மாநிலங்களின் வளர்ச்சிக்காக தெலுங்கானா அரசு செயல்படும் என்று தெரிவித்தார்.

Full View
Tags:    

மேலும் செய்திகள்