தெலுங்கானா: கவர்னர் தமிழிசை உரையை தவிர்த்த முன்னாள் முதல்-மந்திரி சந்திரசேகர ராவ்

தெலுங்கானா சட்டசபையில் 10-ந்தேதி நடைபெற கூடிய பட்ஜெட் கூட்டத்தொடரில் அவர் பங்கேற்க உள்ளார் என கூறப்படுகிறது.

Update: 2024-02-08 15:21 GMT

ஐதராபாத்,

தெலுங்கானாவில் கடந்த டிசம்பரில் நடந்த சட்டசபை தேர்தலில், கஜ்வெல் தொகுதியில் போட்டியிட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட முன்னாள் முதல்-மந்திரியான சந்திரசேகர ராவ் இன்று முறைப்படி எம்.எல்.ஏ.வாக பதவி பிரமாணம் எடுத்து கொண்டார். அவர் சட்டசபையின் எதிர்க்கட்சி தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்.

இந்நிலையில், சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் நாளில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் உரையாற்றியபோது அதில், பங்கேற்காமல் அவர் தவிர்த்து விட்டார். எனினும் எம்.எல்.ஏ.க்களான, அவருடைய மகன் கே.டி. ராமராவ் மற்றும் மருமகன் ஹரீஷ்னா ராவ் மற்றும் எம்.எல்.சி.யான அவருடைய மகள் கவிதா ஆகியோர் பட்ஜெட் உரையில் கலந்து கொண்டனர்.

ஆனால், வருகிற 10-ந்தேதி நடைபெற கூடிய கூட்டத்தொடரில் அவர் பங்கேற்க உள்ளார் என கூறப்படுகிறது. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தபின் முதன்முறையாக தாக்கல் செய்யவுள்ள பட்ஜெட் இதுவாகும்.

தேர்தல் முடிவு வெளியான ஒரு வாரத்தில் பண்ணை இல்லத்தில் கீழே விழுந்த அவருக்கு இடுப்பு மாற்று அறுவை சிகிச்சை நடத்தப்பட்டது. இதனால், அவர் உடனடியாக பதவியேற்க முடியவில்லை.

Tags:    

மேலும் செய்திகள்