ஜே.இ.இ மெயின் தேர்வுக்கு விண்ணப்பிக்க வருகிற 4-ந்தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு

ஜே.இ.இ மெயின் தேர்வு ஆண்டு தோறும் 2 கட்டங்களாக நடத்தப்படும்.

Update: 2023-12-01 23:45 GMT

சென்னை,

மத்திய அரசின் உயர்கல்வித்துறை நிறுவனங்களான ஐ.ஐ.டி. மற்றும் என்.ஐ.டி.களில் இளநிலை பட்டப்படிப்புகளில் சேர, ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வு (ஜே.இ.இ) நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வானது மெயின் தேர்வு மற்றும் அட்வான்ஸ் தேர்வு என இரு பிரிவுகளாக நடத்தப்படுகிறது. இதில், ஜே.இ.இ மெயின் தேர்வு ஆண்டு தோறும் 2 கட்டங்களாக நடத்தப்படும்.

அதன்படி, 2024-25-ம் கல்வியாண்டுக்கான ஜே.இ.இ மெயின் தேர்வு வருகிற 2024-ம் ஆண்டு ஜனவரி மாதம் 24-ந்தேதி முதல் பிப்ரவரி 1-ந்தேதி வரை நடை பெறவுள்ளது. இதற்கான, ஆன்லைன் விண்ணப்ப பதிவு கடந்த மாதம் 1-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை நடைபெற்றது. இதற்கிடையில், ஜே.இ.இ மெயின் தேர்வுக்கு விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் என்று தேசிய தேர்வுகள் முகமைக்கு மாணவர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த நிலையில் இதனை ஏற்றுக் கொண்ட தேர்வு முகமை, ஜே.இ.இ தேர்வுக்கு விண்ணப்பிக்க வருகிற 4-ந்தேதி வரை கால அவகாசத்தை நீட்டித்துள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்