கர்நாடக முதல்-மந்திரி பதவி கிடைக்காமல் போனதற்கு காரணம்... மனம் திறந்த டி.கே. சிவக்குமார்

கர்நாடக துணை முதல்-மந்திரியாக பதவி ஏற்றதற்கான காரணங்களை டி.கே. சிவக்குமார் மனம் திறந்து கூறியுள்ளார்.

Update: 2023-06-04 05:40 GMT

ராமநகர்,

கர்நாடகாவின் ராமநகர் மாவட்டத்தில் நடந்த கூட்டமொன்றில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மூத்த தலைவர் மற்றும் கர்நாடக துணை முதல்-மந்திரியான டி.கே. சிவக்குமார் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறும்போது, முதல்-மந்திரியாகும் நோக்கத்துடன் இருந்த தனக்கு, கட்சியின் முன்னாள் தலைவர்களான சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி சில அறிவுரைகளை வழங்கினர்.

அதன்பின், அந்த இலக்கை கைவிட்டு விட்டேன். கட்சியின் தலைமைக்கு தலைவணங்க வேண்டியிருந்தது.  அதனால், துணை முதல்-மந்திரி பதவியை ஏற்றேன்.

நான் முதல்-மந்திரியாவதற்காக நீங்கள் அதிக எண்ணிக்கையில் எனக்கு வாக்களித்து இருந்தீர்கள். ஆனால், கட்சியின் மேலிடம் ஒரு முடிவு எடுத்தது.

மூத்த தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி, கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே ஆகியோர் கூறிய அறிவுரையை ஏற்று கொண்டேன். தற்போது, நான் தொடர்ந்து பொறுமையாகவும் மற்றும் காத்திருக்கவும் வேண்டும்.

ஆனால், நீங்கள் விரும்பிய விசயங்கள் வீணாக போகாது என்று கூட்டத்தினரை நோக்கி கூறியுள்ளார். இதனால், அவர் கர்நாடக முதல்-மந்திரியாகும் தனது ஆவலை வெளிப்படுத்தி உள்ளதுடன், அடுத்து அதற்கான வேலையில் இறங்க தயாராவது போன்ற தகவலையும் சூசகமுடன் தெரிவித்து உள்ளார்.

கர்நாடகாவில் கடந்த மே மாதம் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், டி.கே. சிவக்குமார் 1 லட்சத்திற்கும் கூடுதலான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அக்கட்சி தனிமெஜாரிட்டியுடன் இடங்களை கைப்பற்றி ஆட்சியமைத்தது.

இதன்பின்னர், நீண்டஇழுபறிக்கு பின்னர், கர்நாடக கர்நாடக முதல்-மந்திரியாக சித்தராமையாவும், கர்நாடக துணை முதல்-மந்திரியாக டி.கே. சிவக்குமாரும் பதவியேற்று கொண்டனர். இதில், கட்சியின் முன்னாள் துணை முதல்-மந்திரியான பரமேஸ்வராவும் கர்நாடக முதல்-மந்திரிக்கான போட்டியில் காணப்பட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்