எம்.பி.பதவியில் இருந்து நீக்கப்பட்டதற்கு எதிராக மஹுவா மொய்த்ரா சுப்ரீம் கோர்ட்டில் மனு

அவையில் மஹுவா மொய்த்ரா பேசுவதற்குக்கூட வாய்ப்பளிக்கவில்லை என்று கூறி எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தனர்.

Update: 2023-12-11 10:37 GMT

புதுடெல்லி,

மக்களவையில் அதானி குழுமத்துக்கு எதிராகக் கேள்வி எழுப்ப, தொழிலதிபர் தர்ஷன் ஹீராநந்தானியிடம் இருந்து திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா லஞ்சம் வாங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து பாஜக எம்.பி. வினோத் குமார் சோன்கர் தலைமையிலான மக்களவை நெறிமுறைகள் குழு விசாரணை நடத்தியது. அந்த குழு தனது அறிக்கையை கடந்த நவ. 9-ஆம் தேதி வெளியிட்டது.அதில், மஹுவா மொய்த்ராவைப் பதவிநீக்கம் செய்யப் பரிந்துரைக்கப்பட்டது.

இந்த விசாரணை அறிக்கை மக்களவையில் கடந்த  8-ம் தேதி தாக்கல் செய்யப்பட்டு உடனடியாக குரல் வாக்கெடுப்பின் மூலமாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி, மக்களவை உறுப்பினர் பதவியிலிருந்து மஹுவா மொய்த்ரா நீக்கம் செய்யப்பட்டார். அவையில் மஹுவா மொய்த்ரா பேசுவதற்குக்கூட வாய்ப்பளிக்கவில்லை என்று கூறி எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தனர்.

இந்நிலையில் மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து தான் நீக்கப்பட்டதற்கு எதிராக மஹுவா மொய்த்ரா சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு சுப்ரீம் கோர்ட்டில் விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்