கர்நாடகாவில் வெள்ளநீரில் மூழ்கி இரண்டு பேர் உயிரிழப்பு..!

கர்நாடகாவில் வெள்ளநீரில் மூழ்கி இரண்டு பேர் உயிரிழந்தனர்.

Update: 2023-07-06 05:01 GMT

பெங்களூரு,

கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை கடந்த ஜூன் மாதத்தில் தொடங்கியது. ஆனால் ஜூன் மாதத்தில் போதிய அளவு மழை பெய்யவில்லை. இந்த நிலையில் மாநிலத்தில் தற்போது பரவலாக மழை பெய்து வருகிறது.

தலைநகர் பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் ஆங்காங்கே கனமழையும், சில இடங்களில் மிதமான மழையும் பெய்து வருகிறது. அதுபோல் கர்நாடக கடலோர மாவட்டங்களான தட்சிண கன்னடா, உடுப்பி, உத்தரகன்னடா ஆகிய பகுதிகளில் கடந்த 2 நாட்களாக தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. மேலும் தாழ்வான பகுதிகளில் மழை வெள்ளம் குளம்போல் தேங்கி நிற்கிறது.

இந்த நிலையில், கர்நாடகாவில் கடலோர மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. கர்நாடகாவில் வெள்ளநீரில் மூழ்கி இரண்டு பேர் உயிரிழந்தனர். தாழ்வான பகுதிகளில் வெள்ளம் புகுந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. தட்சிண கன்னடா மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. உடுப்பி, சிக்கமகளூர், குடகு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

கர்நாடக கடலோர மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு அதாவது இன்று (வியாழக்கிழமை) முதல் 7-ந்தேதி (சனிக்கிழமை) வரை கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறி அம்மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் 'ரெட் அலர்ட்' (மிக அதிக கனமழை) எச்சரிக்கையை விடுத்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்