உத்தர பிரதேசம்: போலீஸ் தலைமை ஏட்டு தூக்கிட்டு தற்கொலை

தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update:2023-05-31 01:55 IST

லக்னோ,

உத்தரபிரதேசத்தின் பண்டா மாவட்டம் ஓரை போலீஸ் நிலையத்தில் தலைமை ஏட்டாக பணிபுரிந்தவர் ஜெய் சந்திர பிரஜாபதி. அவர் தான் தங்கியிருந்த அறையில் தூக்கில் பிணமாக தொங்கினார்.

இதையடுத்து அவரது உடலை கைப்பற்றிய போலீசார், விசாரணையில் இறங்கினர். அவரது தற்கொலைக்கான காரணம் குறித்த எந்த தகவலும் உடனடியாக தெரியவரவில்லை. இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்