ஐ.ஐ.டி. மாணவி பாலியல் வன்கொடுமை:புல்டோசரை இயக்க தாமதம் ஏன்? - மஹுவா மொய்த்ரா கேள்வி

ஐ.ஐ.டி. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக போலீசார் 3 பேரை கைது செய்துள்ளனர்.

Update: 2024-01-02 14:36 GMT

லக்னோ,

உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள ஐ.ஐ.டி. பனாரஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவியை, கடந்த நவம்பர் 1-ந்தேதி 3 பேர் கொண்ட கும்பல் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக குணால் பாண்டே, ஆனந்த் என்ற அபிஷேக் சவுகான் மற்றும் சக்சம் படேல் ஆகிய 3 பேரை கடந்த 31-ந்தேதி கைது போலீசார் செய்தனர். அவர்கள் மூன்று பேரும் பா.ஜ.க.வின் ஐ.டி. பிரிவு நிர்வாகிகள் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில், திரிணாமூல் காங்கிரஸ் முன்னாள் எம்.பி. மஹுவா மொய்த்ரா தனது 'எக்ஸ்' தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "பா.ஜ.க.வின் ஐ.டி. பிரிவைச் சேர்ந்தவர்கள் ஒரு பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். யோகி ஆதித்யநாத் என்ன செய்து கொண்டிருக்கிறார்? இந்த முறை உங்கள் புல்டோசரை இயக்க இவ்வளவு தாமதம் ஏன்?" என்று பதிவிட்டுள்ளார். மேலும் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள், யோகி ஆதித்யநாத்துடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் அவர் பகிர்ந்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்