''நாட்டு நாட்டு'' பாடலுக்கு நடனமாடி அசத்திய தூதரக அதிகாரிகள் வைரல் வீடியோ!!

தற்போது அனைத்து இடங்களிலும் நாட்டு நாட்டு பாடல் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது என்று தான் கூறவேண்டும். இதை யாராலும் மறுக்கவும் முடியாத ஒன்றாக உள்ளது.

Update: 2023-03-14 10:21 GMT

புதுடெல்லி

95வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நேற்று நடைபெற்றது. இதில் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான ஆர்ஆர்ஆர் திரைப்படத்தில் இடம் பெற்ற 'நாட்டு நாட்டு' பாடல் சிறந்த ஒரிஜினல் பாடல் பிரிவில் ஆஸ்கர் விருதை பெற்றது. மேலும் ஆஸ்கர் மேடையில் இந்த பாடல் பாடப்பட்டதோடு இதற்கு நடன கலைஞர்கள் நடனமாடினர். அப்போது அந்த அரங்கமே எழுந்து நின்று கரவொலி எழுப்பியது.

இந்நிலையில் அமெரிக்காவில் போலீஸ் அதிகாரிகள் நாட்டு நாட்டு பாடலுக்கு அதேமாதிரி நடனம் ஆடும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், டெக்சாஸைச் சேர்ந்த இரண்டு போலீஸ்காரர்கள் இன்னொரு நபருடன், நாட்டு நாட்டு பாடலுக்கு நடனமாடுவதைக் காணலாம். அந்த பகுதியில் ஹோலி கொண்டாட்டம் நடைபெற்று கொண்டிருந்தது. அவர்களை சுற்றியுள்ள அனைவரும் ஹோலி விளையாடிக் கொண்டிருந்தனர்.

பின்னணியில் நாட்டு நாட்டு பாடல் இசைக்க, அந்த நபர் தனது கைகளை காவலர்களின் தோள்களில் வைத்து, கொக்கி படியைக் காட்டினார். போலீஸ்காரர்களும் அவரைப் பின்பற்றி, பாடலுக்கு ஏற்றவாறு நடமாடினர். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதுபோல் 'நாட்டு நாட்டு'' பாடலுக்கு இந்திய கொரிய தூதரக அதிகாரிகள் நடனமாடி அசத்தினர்.

தற்போது அனைத்து இடங்களிலும் நாட்டு நாட்டு பாடல் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது என்று தான் கூறவேண்டும். இதை யாராலும் மறுக்கவும் முடியாத ஒன்றாக உள்ளது. இந்தப் பாடல் தற்போது உலக அளவில் தடம் பதித்துள்ளது.



Tags:    

மேலும் செய்திகள்