ஒரே மாதத்தில் 23 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்திய 'வாட்ஸ்-அப்' கணக்குகள் முடக்கம்..!!

ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் இந்தியாவில் 23 லட்சத்து 28 ஆயிரத்து வாட்ஸ் ஆப் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது.

Update: 2022-10-02 12:33 GMT

Image Courtesy: PTI 

சென்னை,

விதிமுறைகளை மீறி செயல்படும் கணக்குகளை மாதம் தோறும் வாட்ஸ் ஆப் இந்தியா நிறுவனம் முடக்கி வருகிறது. அதன்படி, கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் இந்தியாவில் 23 லட்சத்து 28 ஆயிரத்து வாட்ஸ் ஆப் கணக்குகளை அந்நிறுவனம் முடக்கியுள்ளது.

மத்திய அரசின் தகவல் தொழில்நுட்ப விதிகளை மீறி செயல்பட்ட குற்றத்திற்காக இந்த கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. கடந்த ஜூலை மாதம் இதே போன்று மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் சுமார் 23.87 லட்சம் கணக்குகளை வாட்ஸ் ஆப் முடக்கியுள்ளது. அதேபோல் கடந்த ஜூன் மாதத்தில் 22 லட்சம் கணக்குகளும், மே மாதம் 19 லட்சம் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன.

கடந்த மாதம் பயனர்-பாதுகாப்பு அறிக்கையில் பெறப்பட்ட பயனர் புகார்களின் அடிப்படையில் கிட்டத்தட்ட 13 லட்சம் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் முடக்கப்பட்டதில் 10 லட்சம் கணக்குகள் பிறரின் எந்த வித புகாரும் இன்றி நிறுவனமே கண்காணித்து தாமாக முடக்கியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்