ரெயில் பெட்டி கூரையின் மீது ஏறி 'செல்பி' எடுக்க முயன்ற வாலிபர் உடல் கருகினார்- உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை

ரெயில் பெட்டி கூரையின் மீது ஏறி செல்பி எடுக்க முயன்ற வாலிபர் உடல் கருகினார். அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Update: 2022-09-13 11:36 GMT

மும்பை,

ரெயில் பெட்டி கூரையின் மீது ஏறி செல்பி எடுக்க முயன்ற வாலிபர் உடல் கருகினார். அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

செல்பி

மும்பை பாந்திரா டெர்மினலில் இருந்து ஆரவலி எக்ஸ்பிரஸ் ரெயில் ஒன்று காலி பெட்டிகளுடன் ஜோகேஸ்வரி-ராம்மந்திர் ரெயில் நிலையங்களுக்கிடையே நிறுத்தப்பட்டு இருந்தது. நேற்றுமுன்தினம் காலை 9.55 மணி அளவில் வாலிபர் ஒருவர் அங்கு வந்தார். ரெயில் பெட்டியின் கூரை மீது ஏறி தனது செல்போனில் செல்பி எடுக்க முயன்றதாக தெரிகிறது.

அப்போது தவறுதலாக அவரது உடம்பில் உயர்மின் அழுத்த கம்பி பட்டது. இதனால் மின்சாரம் தாக்கப்பட்டு கீழே தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார்.

ஆபத்தான நிலையில் சிகிச்சை

தகவல் அறிந்த ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வாலிபரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு 80 சதவீதம் உடல் கருகிய நிலையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

இது குறித்து ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து நடத்திய விசாரணையில், ஜோகேஸ்வரியை சேர்ந்த ஆமன் சேக் (வயது22) என்றும், அந்த பகுதியில் உள்ள சரக்கு ஏற்றும் மற்றும் இறக்கும் கடையில் ஏஜெண்டாக வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது.

Tags:    

மேலும் செய்திகள்