நாகையில் பள்ளி மாணவர்களுக்கான தேசிய அளவில் கடற்கரை கைப்பந்து போட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தொடங்கி வைத்தார்

நாகையில் பள்ளி மாணவர்களுக்கான தேசிய அளவில் கடற்கரை கைப்பந்து போட்டியை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தொடங்கி வைத்தார். கடற்கரை கைப்பந்து நாகை புதிய கடற்கரையில் எஸ்.ஜி.எப்.ஐ. தேசிய அளவிலான பள்ளிகளுக்கு இடையேயான கடற்கரை கைப்பந்து போட்டிகள் நடைபெற்று வருகிறது

Update: 2017-01-31 19:00 GMT

நாகப்பட்டினம்,

கடற்கரை கைப்பந்து

நாகை புதிய கடற்கரையில் எஸ்.ஜி.எப்.ஐ. தேசிய அளவிலான பள்ளிகளுக்கு இடையேயான கடற்கரை கைப்பந்து போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதன் தொடக்க விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. விழாவிற்கு நாகை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கஸ்தூரிபாய் தலைமை தாங்கினார். மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் சிவா முன்னிலை வகித்தார். சென்னை முதன்மை உடற்கல்வி ஆய்வாளர் சந்திரன் வரவேற்றார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு துரை போட்டியினை தொடங்கி வைத்தார். எஸ்.ஜி.எப்.ஐ. முதன்மை செயலாளர் கே.எஸ்.மூர்த்தி, சர் ஐசக் நியூட்டன் கல்வி நிறுவன தலைவர் ஆனந்த் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். கடற்கரை கைப்பந்து போட்டியில் தமிழ்நாடு, டெல்லி, உத்தரபிரதேசம், கோவா, குஜராத், தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த 100–க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் 14, 17, 19 வயதுக்குட்பட்டவர்களுக்கு தனித்தனியாக போட்டிகள் நடத்தப்படுகிறது.

விழாவில் மாவட்ட கல்வி அலுவலர்கள் வேதரத்தினம், ராஜேந்திரன், தஞ்சை மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் ராஜேந்திரன், திருவாரூர் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் ஜெயச்சந்திரன், பள்ளி ஆய்வாளர் ராமநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் நாகை மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் ராதாகிருஷ்ணன் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்