ஆசிய விளையாட்டு போட்டி 2018: மகளிர் 200 மீ ஓட்டப்பந்தயத்தில் வெள்ளி வென்றார் டூட்டிசந்த்
ஆசிய விளையாட்டு போட்டியில் மகளிர் 200 மீ ஓட்டப்பந்தயத்தில் இந்தியாவின் டூட்டிசந்து வெள்ளி பதக்கம் வென்றார். #AsianGames2018;
ஜகார்த்தா,
இந்தோனேசியாவில் நடந்து வரும் 18வது ஆசிய விளையாட்டு போட்டிகளில், இந்திய அணி சார்பில் வீரர்கள், வீராங்கனைகள் பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்று சாதனை படைத்து வருகின்றனர்.
இந்தநிலையில் இன்று நடைபெற்ற மகளிர் 200 மீ ஓட்டப்பந்தயத்தில் இந்தியாவின் டூட்டிசந்து வெள்ளி பதக்கம் வென்றார்.
9 தங்கம், 20 வெள்ளி, 23 வெண்கலம் என 52 பதகங்களுடன் இந்தியா 9-வது இடத்தில் உள்ளது. டேபிள் டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவில் (சரத்கமல், மணிகா) இந்தியாவுக்கு வெண்கலம் கிடைத்துள்ளது.