பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன்; இந்திய வீரர் லட்சயா சென் 2வது சுற்றுக்கு முன்னேற்றம்

பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன் ஆடவர் ஒற்றையர் போட்டியில் இந்திய வீரர் லட்சயா சென் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

Update: 2021-10-28 05:42 GMT

பாரீஸ்,

பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன் போட்டிகள் பாரீஸ் நகரில் நடந்து வருகின்றன.  இதில், ஆடவர் ஒற்றையர் ஆட்டத்தில் இந்திய வீரர் லட்சயா சென் (வயது 20) மற்றும் அயர்லாந்து நாட்டின் ஹாத் குயென் ஆகியோர் விளையாடினர்.

இந்த போட்டியில், 21-10, 21-16 என்ற செட் கணக்கில் சென் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.  இந்த போட்டி 45 நிமிடங்கள் நீடித்தது.

இதேபோன்று இந்தியாவின் சவுரப் வர்மா ஆடவர் ஒற்றையரில் பிரேசிலின் கோர் கோயெல்லோ என்பவரை 22-20, 21-19 என்ற செட் கணக்கில் வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

மேலும் செய்திகள்