தேசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி; தங்கம் வென்ற பவேஷ்
தேசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியின் ஆடவர் பிரிவில் பவேஷ் செகாவத் தங்க பதக்கம் வென்றுள்ளார்.;
புதுடெல்லி,
தேசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி 2021ன் ஆடவர் பிரிவு 25 மீட்டர் பிஸ்டல் துப்பாக்கி சுடுதலில் ராஜஸ்தானை சேர்ந்த 25 வயதுடைய பவேஷ் செகாவத் தங்க பதக்கம் வென்றுள்ளார். இதேபோன்று குர்பிரீத் சிங் வெள்ளி பதக்கம் வென்றுள்ளார். காமன்வெல்த் சாம்பியனான அனீஷ் பான்வாலா வெண்கல பதக்கம் வென்றுள்ளார்.