மத்திய அரசு துறைகளில் அதிகாரி பணிகள்

பல்வேறு மத்திய அரசு துறைகளில் ஏற்பட்டுள்ள அதிகாரி காலி பணியிடங்களுக்கு 81 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இது பற்றிய விவரம் வருமாறு:-

Update: 2018-10-23 08:06 GMT
மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையம் சுருக்கமாக யூ.பி.எஸ்.சி. என அழைக்கப்படுகிறது. தற்போது இந்த அமைப்பு மத்திய அரசின் பல்வேறு துறைகளில் ஏற்பட்டுள்ள அதிகாரி பணியிடங்களை நிரப்ப விண்ணப்பம் கோரி உள்ளது. சுரங்கத்துறையில் சுரங்க பாதுகாப்பு துணை இயக்குனர் பணியில் எலக்ட்ரிக்கல் பிரிவில் 23 பேரும், மைனிங் பிரிவில் 44 பேரும் தேர்வுசெய்யப்படுகிறார்கள். இதுபோல உதவி பொறியாளர், ரெப்ரிஜிரேசன் என்ஜினீயர், கூடுதல் உதவி இயக்குனர், துணை இயக்குனர் சிவில், துணை கட்டிட கலை இயக்குனர் போன்ற பிரிவிலும் பணிகள் உள்ளன. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்க்கலாம்...

வயது வரம்பு

ஒவ்வொரு பணிக்கும் வயது வரம்பு வேறுபடுகிறது. அதிகபட்சம் 45 வயதுக்கு உட்பட்டவர் களுக்கு பணிகள் உள்ளன. அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வும் அனுமதிக்கப்படுகிறது. உதவி என்ஜினீயர் பணிக்கு 30 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

கல்வித்தகுதி

எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், எலக்ட்ரானிக்ஸ், மைனிங், சிவில், ஆர்கிடெக்ட் போன்ற என்ஜினீயரிங் பட்டப்படிப்புகளும், குறிப்பிட்ட பணி அனுபவமும் தகுதியாக கேட்கப்பட்டுள்ளது.

கட்டணம்

விண்ணப்பதாரர்கள் ரூ.25 கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். பெண் விண்ணப்பதாரர்கள், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் இந்த கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.

விண்ணப்பிக்கும் முறை

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசிநாள் 1-11-2018 -ந் தேதியாகும்.

விண்ணப்பிக்கவும் விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும். www.upsc.gov.in என்ற இணையதள பக்கத்தைப் பார்க்கலாம்.

மேலும் செய்திகள்