வானவில் : கையடக்கமான ஸ்மார்ட்போன்

இப்போதெல்லாம் வரும் ஸ்மார்ட்போன்களின் திரை அளவு அதிகரித்துக் கொண்டே வருகிறது. 6 அங்குலத்துக்கு மேலான ஸ்மார்ட்போன்களைத்தான் பலரும் பயன்படுத்துகின்றனர்.

Update: 2018-10-24 06:17 GMT
பாம் நிறுவனம் கையடக்கமான அதாவது உள்ளங்கையில் அடங்கும் வகையிலான ஸ்மார்ட்போனை உருவாக்கியுள்ளது. இந்த போனின் திரை 3.5 அங்குலம் மட்டுமே. ஆனால் ஸ்மார்ட்போனின் செயல்பாடுகளை உள்ளடக்கியது.

பொதுவாக இப்போது அனைவருமே இரண்டுக்கும் மேற்பட்ட சிம்களை பயன்படுத்துகின்றனர். மொபைல் சேவை நிறுவனங்களின் சேவைக்குத் தகுந்தபடி அவற்றைப் பயன்படுத்துவது அதிகரித்துள்ளது. அந்த வகையில் மூன்று சிம்களை வைத்திருப்போருக்கு கையடக்கமான இந்த போன் மிகவும் உதவியாக இருக்கும். 

கிரெடிட் கார்டு அளவில்தான் இதன் திரை இருக்கும். இருந்தாலும் இதன் எல்.சி.டி. பேனல் மிகச் சிறப்பாக ஒளிரும். இப்போது அமெரிக்காவில் மட்டுமே இது விற்பனைக்கு வந்துள்ளது. இதன் விலை 350 டாலராகும். இந்திய மதிப்பில் சுமார் ரூ. 25,800. இதில் ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ உள்ளது. 

ஒளிரும் திரை கொரில்லா கண்ணாடியால் ஆனது. அதேபோல பின்பகுதியும் கண்ணாடியால் ஆனது. ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 435 எஸ்.ஓ.சி. 3 ஜி.பி. ரேம் மற்றும் 32 ஜி.பி. நினைவகம் கொண்டது. இதில் 12 மெகா பிக்ஸெல் பின்புற கேமராவும், முன்பகுதியில் 8 மெகாபிக்ஸெல் கேமராவும் உள்ளது. இதில் 800 எம்.ஏ.ஹெச். பேட்டரி உள்ளது. இது 3 நாள் வரை செயல்படக் கூடியது. இதன் எடை 62.5 கிராம் மட்டுமே. இதில் பேஸ் அன்லாக் வசதியும் உள்ளது. விரைவிலேயே இந்தியாவில் இந்த போன் விற்பனைக்கு வர உள்ளது. 

மேலும் செய்திகள்