புதன்கிழமை பங்கு வர்த்தகத்தில் சென்செக்ஸ் 23 புள்ளிகள் உயர்வு - நிப்டி 11 புள்ளிகள் இறங்கியது

டிவிடெண்டு மற்றும் பல்வேறு விதங்களில் பங்குகளை விற்பனை செய்வதால் கோல் இந்தியா நிறுவனம் மூலம் மத்திய அரசு ரூ.19,000 கோடி வருவாய் ஈட்டுகிறது.

Update: 2019-03-21 09:21 GMT

உலக அளவில் நிலக்கரி உற்பத்தியில் பொதுத்துறை நிறுவனமான கோல் இந்தியா முதலிடத்தில் இருந்து வருகிறது. நாட்டின் மொத்த நிலக்கரி உற்பத்தியில் கோல் இந்தியாவும், அதன் துணை நிறுவனங்களும் 80 சதவீத பங்கினைக் கொண்டுள்ளன. 2018 டிசம்பர் இறுதி நிலவரப்படி இந்நிறுவனத்தில் மத்திய அரசுக்கு 72.91 சதவீத பங்குகள் இருக்கின்றன. நிதி ஆண்டின் தொடக்கத்தில் அது 78.55 சதவீதமாக இருந்தது.

பல்வேறு வழிமுறைகளில் கோல் இந்தியா பங்குகள் விற்பனை, அதன் டிவிடெண்டு மற்றும் பங்குகளை திரும்ப வாங்குதல் போன்றவற்றால் மத்திய அரசின் பங்கு மூலதனம் குறைந்துள்ளது. இந்நிலையில், நடப்பு நிதி ஆண்டில் கோல் இந்தியா நிறுவனம் வாயிலாக மட்டும் மத்திய அரசுக்கு ஏறக்குறைய ரூ.19,000 கோடி வருவாய் கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

டிசம்பர் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் கோல் இந்தியா நிறுவனம் ரூ.4,567 கோடியை ஒட்டுமொத்த நிகர லாபமாக ஈட்டி இருக்கிறது. கடந்த நிதி ஆண்டின் இதே காலாண்டில் அது ரூ.3,043 கோடியாக இருந்தது. ஆக, லாபம் 50 சதவீதம் அதிகரித்துள்ளது.

டிசம்பர் வரையிலான 9 மாதங்களில் இந்நிறுவனத்தின் மொத்த வருவாய் மற்றும் நிகர விற்பனை தலா 2.8 மடங்கு உயர்ந்து ரூ.11,518 கோடி மற்றும் ரூ.66,192 கோடியாக அதிகரித்து இருக்கிறது.

பங்கு விலை

மும்பை பங்குச்சந்தையில், புதன்கிழமை அன்று வர்த்தகம் தொடங்கியபோது கோல் இந்தியா நிறுவனப் பங்கு ரூ.243.10-க்கு கைமாறியது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக ரூ.244-க்கும், குறைந்தபட்சமாக ரூ.236.20-க்கும் சென்ற இப்பங்கு இறுதியில் ரூ.237.20-ல் நிலைகொண்டது.

மேலும் செய்திகள்