பங்குச்சந்தை துளிகள்

தமது முதலீட்டு ஆலோசகரின் அறிவுரையின்படி செயல்பட வேண்டும்.

Update: 2019-04-16 05:00 GMT
* யூ.பி.எல். நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்யலாம் என ஆன்டிக் ஸ்டாக் புரோக்கிங் நிறுவனம் கூறுகிறது. மேலும் இந்நிறுவனம் இப்பங்கிற்கான எதிர்கால இலக்கை (ரூ.910-ல் இருந்து) ரூ.1,000-ஆக உயர்த்தி இருக்கிறது. மும்பை பங்குச்சந்தையில் திங்கள்கிழமை அன்று இப்பங்கின் விலை ரூ.929.75-ல் நிலைகொண்டது. சென்ற வார இறுதி நிலவரத்தை காட்டிலும் இது 0.31 சதவீதம் உயர்வாகும்.

* மகிந்திரா அண்டு மகிந்திரா நிறுவனப் பங்கினை வாங்கலாம் என மோதிலால் ஆஸ்வால் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்நிறுவனம் இப்பங்கிற்கான எதிர்கால இலக்கை ரூ.790-ஆக நிர்ணயித்து இருக்கிறது. திங்கள்கிழமை வர்த்தகத்தில் இப்பங்கின் விலை 1.91 சதவீதம் அதிகரித்து ரூ.1371.15-ல் முடிவுற்றது.

* டாட்டா ஸ்டீல் நிறுவனப் பங்கை வாங்கலாம் என ஐசிஐசிஐ டைரக்ட் நிறுவனம் பரிந்துரை செய்கிறது. இந்தப் பங்கிற்கான எதிர்கால இலக்கை இந்நிறுவனம் ரூ.625-ஆக நிர்ணயித்து இருக்கிறது. மும்பை சந்தையில் திங்கள்கிழமை அன்று வர்த்தகம் முடிந்தபோது இப்பங்கின் விலை ரூ.552-ஆக இருந்தது. கடந்த வார இறுதி நிலவரத்துடன் ஒப்பிடும்போது இது 3.42 சதவீதம் அதிகமாகும்.

* மதர்சன் சுமி சிஸ்டம்ஸ் நிறுவனப் பங்கை வாங்கலாம் என எச்.எஸ்.பீ.சி. நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. எனினும், இந்தப் பங்கிற்கான எதிர்கால இலக்கை இந்நிறுவனம் (ரு.233-ல் இருந்து) ரூ.170-ஆக குறைத்துள்ளது. திங்கள்கிழமை வர்த்தகத்தில் இப்பங்கின் விலை 3.48 சதவீதம் ஏற்றம் கண்டு ரூ.154.45-ல் முடிவுற்றது.

* என்.எம்.டீ.சி. நிறுவனப் பங்குகளை வாங்கவும் வேண்டாம், விற்கவும் வேண்டாம் என ஈடல்வைஸ் நிறுவனம் கூறி உள்ளது. இந்நிறுவனம் இந்தப் பங்கிற்கான எதிர்கால இலக்கை ரூ.100-ஆக நிர்ணயித்து இருக்கிறது. மும்பை சந்தையில் நேற்று இப்பங்கின் விலை ரூ.104.70-ல் நிலைபெற்றது. இது சென்ற வார இறுதி நிலவரத்துடன் ஒப்பிடும்போது 0.53 சதவீதம் உயர்வாகும்.

நிறுவனப் பங்குகள் பற்றிய பரிந்துரைகள் பங்குச்சந்தை வல்லுனர்களின் மதிப்பீடு அடிப்படையில் கொடுக்கப்படுகிறது. எனவே, பங்குகளில் முதலீடு செய்வோர் அந்த நேரத்தில் சந்தை நிலவரம் எவ்வாறு உள்ளது என்பதை ஆராய்ந்து தமது சொந்த முடிவுகளின் பேரில் அல்லது தமது முதலீட்டு ஆலோசகரின் அறிவுரையின்படி செயல்பட வேண்டும்.

மேலும் செய்திகள்