விட்டதை மீண்டும் பிடித்தது கரடி

சென்செக்ஸ் 204 புள்ளிகள் இழப்பு நிப்டி 65 புள்ளிகள் இறங்கியது

Update: 2019-05-16 04:25 GMT
மும்பை

புதன்கிழமை அன்று பங்கு வர்த்தகம் மீண்டும் கரடியின் பிடியில் சிக்கியது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 204 புள்ளிகளை இழந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 65 புள்ளிகள் இறங்கியது.

சீன நிலவரம்

சீனாவில், கடந்த ஏப்ரல் மாதத்தில் சில்லறை விற்பனை சரிந்திருப்பதுடன், தொழில்துறை உற்பத்தி புள்ளிவிவரமும் அதன் பின்னடைவை வெளிப்படுத்தியது. ஏற்கனவே அமெரிக்கா உடனான அதன் வர்த்தக போட்டியால் உலக அளவில் கடும் ஐயப்பாடுகள் எழுந்துள்ள நிலையில் இது மேலும் பங்குச்சந்தை வட்டாரங்களின் ஊக்கத்தை சிதைப்பதாக இருந்தது. எனவே ஆசிய, ஐரோப்பிய நாடுகளில் பங்கு வியாபாரம் படுத்தது. அதன் தாக்கம் இங்கும் இருந்தது. அதனால் பங்குகளை அதிகம் விற்கும் போக்கு இருந்தது.

அந்த நிலையில், மும்பை சந்தையில் பல்வேறு துறைகளுக்கான குறியீட்டு எண்களும் இறங்கின. அதில் உலோகத் துறை குறியீட்டு எண் அதிகபட்சமாக 2.08 சதவீதம் சரிந்தது. அடுத்து தொலைத் தொடர்புத் துறை குறியீட்டு எண் 1.96 சதவீதம் குறைந்தது. ரியல் எஸ்டேட், ஐ.டி., நுகர்பொருள் ஆகிய 3 துறை குறியீட்டு எண்கள் லேசான ஏற்றம் கண்டன.

சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில் 5 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தது. 25 நிறுவனப் பங்குகளின் விலை சரிந்தது. இந்தப் பட்டியலில் ஆகிய 5 நிறுவனப் பங்குகளின் விலை அதிகரித்தது. அதே சமயம் உள்பட 25 நிறுவனப் பங்குகளின் விலை குறைந்தது.

சென்செக்ஸ்

மும்பை பங்குச்சந்தையில், வர்த்தகத்தின் இறுதியில் சென்செக்ஸ் 203.65 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு 37,114.88 புள்ளிகளில் நிலைகொண்டது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 37,559.67 புள்ளிகளுக்கும், குறைந்தபட்சமாக 37,047.87 புள்ளிகளுக்கும் சென்றது.

இந்தச் சந்தையில் 983 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும், 1,583 நிறுவனப் பங்குகளின் விலை சரிந்தும் இருந்தது. 177 பங்குகளின் விலையில் மாற்றம் இல்லை. நேற்று மொத்த வர்த்தகம் ரூ.2,578 கோடியாக குறைந்தது. கடந்த செவ்வாய்க்கிழமை அன்று அது ரூ.2,371 கோடியாக இருந்தது.

தேசிய பங்குச்சந்தை

தேசிய பங்குச்சந்தையில், வர்த்தகத்தின் இறுதியில் நிப்டி 65.05 புள்ளிகள் குறைந்து 11,157 புள்ளிகளில் முடிவுற்றது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 11,286.80 புள்ளிகளுக்கும், குறைந்தபட்சமாக 11,136.95 புள்ளிகளுக்கும் சென்றது.

மேலும் செய்திகள்