கனடாவில் புகலிடம் கோருவோர் எண்ணிக்கை அதிகரிப்பு

அகதிகளுக்கு அதிக ஆதரவு தரும் நாடுகளில் ஒன்றாகத் திகழும் கனடாவுக்கு புகலிடம் தேடி வருவோர் எண்ணிக்கை கூடியுள்ளது.

Update: 2019-05-25 11:05 GMT
கனடா நாட்டு புள்ளி விவரத் துறையால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விஷயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையின்படி, கடந்த இரண்டு ஆண்டுகளில் கனடாவில் புகலிடம் கோரி விண்ணப்பித்தவர் களின் எண்ணிக்கை மூன்று மடங்காக அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது.

கணக்கெடுப்பின்படி, 2015-ம் ஆண்டு 16 ஆயிரம் பேரும், 2016-ல் 50 ஆயிரம் பேரும், 2018-ல் 55 ஆயிரம் பேரும் புகலிடம் கோரி விண்ணப்பித்துள்ளனர்.

கடந்த 2017-ம் ஆண்டு விண்ணப்பித்த 50 ஆயிரம் பேரில், 12 ஆயிரம் பேருக்கு அனுமதி வழங்கப் பட்டுள்ளது. சுமார் 10 ஆயிரம் பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. 27 ஆயிரம் பேரின் விண்ணப்பங்களின் முடிவு நிலுவையில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

2017-ம் ஆண்டு ஜனவரி மாதம் அமெரிக்க ஜனாதி பதியாகப்பொறுப்பேற்ற டிரம்ப், ஆரம்பம் முதலே அமெரிக்காவின் குடியேற்றக் கொள்கையில் கடுமையான நிலைப்பாட்டை மேற்கொண்டுள்ளார். இதன் காரணமாகவே கனடாவில் புகலிடம் கோரும் குடியேற்றவாசிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்